டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றிக்கும் மிக முக்கிய பங்கு அதன் கதை மற்றும் கதாசிரியருக்கு உண்டு. மலையாளத்தில் கதாசிரியர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. படங்களின் டைட்டில் கார்டில் கதாசிரியர்களின் பெயர் வரும்போது ரசிகர்கள் கைதட்டி விசில் அடிக்கும் நிகழ்வுகளும் அங்கே நடக்கின்றன. இப்படி கதாசிரியர்களுக்கான முக்கியத்துவம் வெறும் அங்கீகாரமாக மட்டும் இல்லாமல் இயக்குனர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு கதாசிரியர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் இயக்குனரும் கதாசிரியருமான மிதுன் மானுவேல் தாமஸ்.
மலையாள சினிமாவில் பிரபல இயக்குனரான மிதுன் மானுவேல் தாமஸ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான அஞ்சாம் பாதிரா என்கிற சைக்கோ திரில்லர் வெற்றி படத்தை கொடுத்தவர். இயக்குனராக இருந்து கொண்டே சில படங்களுக்கு கதாசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.. அந்த வகையில் தற்போது புலி முருகன் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள டர்போ படத்திற்கும் இவர்தான் கதை எழுதியுள்ளார்.
வரும் வாரம் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த படம் குறித்து பேட்டி அளித்தபோது, “ஒரு படத்திற்கு கதை தான் ஆணிவேர். கதை சரியில்லை என்றால் மொத்த படமும் தோல்வியை தழுவும். கதையினால் தான் ஒரு படம் வெற்றி பெறுகிறது. அதனால் ஒரு இயக்குனருக்கு சமமான சம்பளம் கதாசிரியருக்கும் கொடுக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார் மிதுன் மானுவேல் தாமஸ்.