2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் |
மலையாள திரையுலகில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. மலையாள நடிகர் சங்கத்தை போலவே தயாரிப்பாளர் சங்கத்திற்கும் முதன்முறையாக சான்ட்ரா தாமஸ் என்கிற பெண் தயாரிப்பாளர் ஒருவர் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை தயாரிப்பாளர் சங்க தேர்தல் குழு நிர்வாகிகள் நிராகரித்த நிலையில் அதற்கு நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் மம்முட்டி தன்னை தொடர்பு கொண்டதாகவும் அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு கூறியதாகவும் இதே நிலையில் உங்கள் மகள் இருந்தால் நீங்கள் என்ன முடிவு எடுத்திருப்பீர்கள் என்று நான் பதிலுக்கு கேட்டதற்கு இவர் ஒன்றும் சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார் சான்ட்ரா தாமஸ். இந்த நிலையில் மம்முட்டி தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு ஒரு பெண் போட்டியிட விரும்பவில்லை என்பதால் தான் இப்படி மம்முட்டி சான்ட்ரா தாமஸை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்பது போன்று செய்தி வெளியில் பரவ ஆரம்பித்தது.
இதனை தொடர்ந்து உடனடியாக இது குறித்து விளக்கம் அளித்துள்ள சான்ட்ரா தாமஸ், “மம்முட்டியை பற்றி நான் எதுவும் தவறாக சொல்லவில்லை. தவிர அவரும் என்னை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளவும் சொல்லவில்லை. நான் தொடர்ந்த வழக்கு குறித்து தான் அவர் பேசினார். அதிலும் குறிப்பாக அவரது நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் ஆன்ட்டோ ஜோசப் சார்பாக அவர் பேசும்போது தான் அந்த வழக்கு வேண்டாமே என்பது போல பேசினார். நான் என் பக்கத்தில் உள்ள நியாயத்தை சொன்னதும் ஒரு பெண் என்பதற்காகவே நான் அவர்களால் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். அதன் பிறகு உன் இஷ்டம் என்று அவர் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இவ்வளவுதான் நடந்தது” என்று கூறியுள்ளார்.