'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
முன்னணி மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன். தமிழில் மூணே மூணு வார்த்தை படத்தின் மூலம் அறிமுகமான இவர் இரும்புத்திரை, தீவிரம், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது 'சேத்துமான்' பட இயக்குனரின் புதிய படத்தில் தர்ஷன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் மலையாளத்தில் தயராகி உள்ள '4.5 கேங்' என்ற வெப் தொடரில் வில்லியாக நடித்துள்ளார். கிருஷாந்த் இயக்கி உள்ளார். மேன்கைண்ட் சினிமா தயாரித்துள்ளது. ஜெகதீஷ், இந்திரன்ஸ், விஜயராகவன், ஹக்கிம் ஷா, சஞ்சு சிவராம், சச்சின், சாந்தி பாலச்சந்திரன், நிரஞ்ச் மணியன் பிள்ளை, ஸ்ரீநாத் பாபு, ஷம்பு அலெக்ஸ் மேனன், பிரசாத்பால், விஷ்ணு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 29 முதல் சோனி லைவ்வில் ஒளிபரப்பப்படுகிறது.
தொடர் குறித்து இயக்குனர் கூறும்போது, “4.5 கேங் என்பது திருவனந்தபுரத்தில் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. திருவனந்தபுரத்தில் உள்ள சில அண்டர் கிரவுண்ட் புரோக்கர் கும்பல்களை பற்றிய கதை. அவர்கள் உள்ளூர் கோயில் திருவிழாவை கையகப்படுத்துவதன் மூலம் மரியாதை பெற முயற்சிக்கிறார்கள். அதற்கு என்னென்ன தந்திரங்களை கையாள்கிறார்கள் என்பதுதான் தொடரின் கதை. இதில் ஒரு கும்பலின் தலைவியாக தர்ஷனா நடித்துள்ளார் என்றார்.