காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியால் பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் கன்னட நடிகர் யஷ். இதைத்தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் யஷ் தனது அடுத்த படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக இலங்கையில் முகாமிட்டு உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் யஷ் தற்போது இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள யாழ் தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்து ரசித்துள்ளார்.
அதே சமயம் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள இலங்கை அரசு அதிகாரிகளில் ஒருவர் யஷ் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளதுடன் அவர் இலங்கையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நடத்த சில இடங்களை தேர்வு செய்வதற்காக வந்துள்ளார் என்கிற தகவலையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரியப்படுத்தி உள்ளார்.