'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஜெயராஜ். தமிழில் பரத் நடித்த போர் ஸ்டுடென்ட்ஸ் படத்தை இயக்கியதுடன் அதில் நடிகர் நரேனை அறிமுகப்படுத்தியதும் இவர் தான். கடந்த வருடம் இவர் மலையாளத்தில் இயக்கிய 19 ஆம் நூற்றாண்டு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது சுரேஷ்கோபி நடித்து வரும் ஒரு பெரும களியாட்டம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜெயராஜ்.
கடந்த 1997ல் ஜெயராஜ் இயக்கத்தில் களியாட்டம் என்கிற படத்தில் நடித்திருந்தார் சுரேஷ்கோபி. இந்த படத்திற்காக சுரேஷ்கோபிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. அதன்பிறகு 2006ல் இவர்கள் கூட்டணி அஸ்வரூதன் என்கிற படத்திற்காக இணைந்தது தற்போது 17 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படம் களியாட்டத்திற்கும் இந்த படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் என இயக்குனர் கூறினாலும் அதன் இரண்டாம் பாகமாக தான் இந்த படம் உருவாகிறது என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.