இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் சாட்டர்டே நைட். இந்த படத்தை பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். தமிழில் ஜோதிகா ரீ என்ட்ரி கொடுத்த 36 வயதினிலே படத்தை இயக்கியவர் இவர்தான். ஏற்கனவே காயங்குளம் கொச்சுண்ணி என்கிற படத்தில் நிவின்பாலியை ஹீரோவாக வைத்து இயக்கி அதை வெற்றிப்படம் ஆக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இரண்டாவது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் தான் இந்த சாட்டர்டே நைட்.
இந்த படத்தில் கதாநாயகியாக சானியா ஐயப்பன் நடித்துள்ளார். முன்னணி காமெடி நடிகர் அஜு வர்கீஸ் மீண்டும் நிவின்பாலியுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. அதன் ஒருபகுதியாக கொச்சியில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனி ஆளாக கலந்து கொண்டு ரசிகர்களை சந்தித்தார் நிவின்பாலி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே ஷாப்பிங் மாலில் இரண்டு நடிகைகள் ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அங்கே கூடியிருந்த மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு சிலர் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் அத்துமீறிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. அதில் நடிகை ஒருவர் ஒரு ரசிகரை அடிப்பதற்காக பாய்ந்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனது. அதுபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காக தான் நிவின்பாலி மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என சொல்லப்படுகிறது.