'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் உருவாகி சமீபத்தில் வெளியான சீதா ராமம் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இந்தியில் அவர் நடிப்பில் வெளியான சுப் என்கிற படமும் பாசிடிவான விமர்சனங்களை பெற்றது. இந்தநிலையில் தனது கனவு படம் என துல்கர் சல்மான் ஏற்கனவே குறிப்பிட்ட 'கிங் ஆப் கோத' என்கிற படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, அதில் தற்போது நடித்து வருகிறார் துல்கர் சல்மான். பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ராயபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷும் நடித்து வருகிறார். சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்ட குரூப் புகைப்படத்தில் இவரும் இடம் பெற்றிருந்ததும், அதே உடையுடன் துல்கருடன் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் அவருக்கு கோகுல் பிறந்தநாள் வாழ்த்து சொன்னதும் இதை உறுதிப்படுத்துகிறது. இதற்கு முன்னதாக சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி, வரலட்சுமி நடிப்பில் வெளியான மாஸ்டர்பீஸ் என்கிற படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் கோகுல் சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..