இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு, அதேசமயம் டைரக்ஷன் துறையில் நுழையாமல் தன் தந்தையைப் போல நடிகராக மாறி தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சற்றும் எதிர்பாராத விதமாக மோகன்லாலின் மகள் விஸ்மாயாவும் தற்போது திரையுலகில் ஒரு நடிகையாக தனது பயணத்தை துவங்கியுள்ளார்.
இவர் அறிமுகமாகும் படத்திற்கு தொடக்கம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை 2018 படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். இந்த பட வாய்ப்பு தனக்கு கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், ‛‛லாலேட்டனையும், சுசித்ரா சேச்சியையும் சந்தித்து பேசும்போது அவர்கள் கண்களில் நம்பிக்கை மின்னுவதை நான் பார்த்தேன். நிச்சயமாக உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா. இது ஒரு பெரிய படம் எல்லாம் இல்லை. சின்ன படம் தான். நான் எப்போதுமே எனது இதயத்துக்கு நெருக்கமான படங்களையே செய்து இருக்கிறேன். இதுவும் அதிலிருந்து வித்தியாசப்படாது. ஆண்டனி சேட்டா (தயாரிப்பாளர்) இது அடுத்தடுத்து இன்னும் பல படங்களில் நாம் இணைந்து பணியாற்றுவதற்கு ஒரு உண்மையான தொடக்கமாக இருக்கட்டும். நம் அன்பான ரசிகர்கள் நம்முடன் இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” கூறியுள்ளார்.