டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில், நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா, ரம்யா கிருஷ்ணன், கிர்த்தி ஷெட்டி மற்றும் பலர் நடித்து பொங்கலன்று வெளிவந்த தெலுங்குப் படம் 'பங்கார்ராஜு'.
50 சதவீத இருக்கைகள் காரணமாக பல பெரிய தெலுங்குப் படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டது. குறிப்பாக 'ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்' ஆகிய படங்கள் வெளிவராததால் தியேட்டர்காரர்கள் எதிர்பார்த்த ஒரு படமாக 'பங்கார்ராஜு' படம் மட்டுமே இருந்தது. அவர்களது எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாகார்ஜுனா, நாக சைதன்யா இருவரது நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதாலும், போட்டிக்கு வேறு படங்கள் இல்லாத காரணத்தாலும் இந்தப் படம் தனித்து வெற்றி பெற்றுள்ளது.
இப்படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணாவை உடனடியாக தங்களது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.




