250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு |
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'ஹரிஹர வீரமல்லு'. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் முதல் நாளில் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக முதல் கட்ட பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் 'கேம் சேஞ்ஜர்' படத்திற்குப் பிறகு முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற படமாக இப்படம் அமைந்திருக்கிறது. பவன் கல்யாண் நடித்து வெளிவந்த படங்களில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற ஒரு படமாகவும் இது இருக்கிறது.
இப்படத்தின் மொத்த தியேட்டர் வியாபாரம் 120 கோடி வரை நடந்துள்ளது. இந்த வார இறுதியில் படம் லாபத்தைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருவதும், மற்ற மொழிகளில் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாததும் இப்படத்திற்கு நெகட்டிவ்வாக அமைந்துள்ளது. முதல் நாளின் வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் தெரிகிறது.