மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா | தனுஷின் இட்லி கடைக்கு புதிய சிக்கலா? | ஆக்ஷன் படத்தில் நடிக்க விரும்பும் சான்வே மேக்னா | திரையில் தோன்றும் ஏஆர் ரஹ்மான் சகோதரி |
பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'. இந்த வாரம் மார்ச் 27ம் தேதி இப்படம் வெளியாகிறது.
கடந்த வாரம் முன்பதிவு ஆரம்பமான ஒரு மணி நேரத்திலும், ஒரு நாளிலும் புதிய முன்பதிவு சாதனையை இந்தப் படம் படைத்தது. தற்போது வரை முன்பதிவில் 58 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மலையாளத் திரையுலகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படத்தின் வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் வசூலாக மட்டுமே இப்படம் 100 கோடி வசூலிக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலையாள சினிமாவின் இத்தனை ஆண்டு கால வரலாற்றில் இப்படி ஒரு வசூல் சாதனை நிகழ்ந்ததில்லை. அது நடந்தால் பெரிய விஷயமாகப் பார்க்கப்படும்.