மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா | தனுஷின் இட்லி கடைக்கு புதிய சிக்கலா? | ஆக்ஷன் படத்தில் நடிக்க விரும்பும் சான்வே மேக்னா | திரையில் தோன்றும் ஏஆர் ரஹ்மான் சகோதரி |
ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதில் இப்படம் மார்ச் 30 தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார் முருகதாஸ்.
இந்நிலையில் 2005ம் ஆண்டில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் தான் இயக்கிய கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இது குறித்து அவர் கூறுகையில், கஜினி- 2 படத்தை இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறேன். தெலுங்கு பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அந்த படத்தை தயாரிக்க உள்ளார். அதனால் அதற்கான சரியான நேரம் வரும்போது அப்படத்தை இயக்குவேன். அதோடு, கஜினி- 2 படத்தை தமிழ், ஹிந்தியில் ஒரே நேரத்தில் இயக்குவேன் என்கிறார் முருகதாஸ். கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர்கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.