மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா | தனுஷின் இட்லி கடைக்கு புதிய சிக்கலா? | ஆக்ஷன் படத்தில் நடிக்க விரும்பும் சான்வே மேக்னா | திரையில் தோன்றும் ஏஆர் ரஹ்மான் சகோதரி |
மாதவனுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட் என்ற படம் வருகிற ஏப்ரல் நான்காம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதையடுத்து மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டாக்சிக், ராக்காயி, மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் நிவின் பாலி உடன் அவர் நடித்து வந்த டியர் ஸ்டூடன்ட்ஸ் என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, அப்படத்தின் மேக்கிங் காட்சிகள் மற்றும் படப்பிடிப்பு நிறைவின்போது படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை நடிகர் நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் வித்யா ருத்ரன் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. இதை சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் ராய் இயக்கி உள்ளனர்.