திரையில் தோன்றும் ஏஆர் ரஹ்மான் சகோதரி | பிளாஷ்பேக் : உண்மையான ஆபரேஷன் காட்சி இடம் பெற்ற படம் | பிளாஷ்பேக் : முதல் சிங்களப் படத்தை தயாரித்த தமிழர் | மனோஜ் பாரதி உடலுக்கு நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி | அதிர்ந்து போனேன் : மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல் | இயக்குனர் பாரதிராஜா மகன், நடிகர் மனோஜ் பாரதி காலமானார் | பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண் | ரன்பீர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் | பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாக பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல் | வருண் தவானுடன் ஆற்றில் குதித்த பூஜாஹெக்டே |
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தாலும் இடையில் விஜய், ரஜினி, கமல், ஷாருக்கான் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார். அதன் பின்னர் இனி வில்லனாக நடிப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விரைவில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். பிரபாஸின் 25வது படமாக உருவாகும் இதன் பட்ஜெட் மட்டும் ரூ. 300 கோடி என கூறப்படுகிறது.
இதில் பிரபாஸூக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் இதற்கான சந்திப்பு நடைபெற்றதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் நடிக்கவுள்ளனர்.