ஆக்ஷன் படத்தில் நடிக்க விரும்பும் சான்வே மேக்னா | திரையில் தோன்றும் ஏஆர் ரஹ்மான் சகோதரி | பிளாஷ்பேக் : உண்மையான ஆபரேஷன் காட்சி இடம் பெற்ற படம் | பிளாஷ்பேக் : முதல் சிங்களப் படத்தை தயாரித்த தமிழர் | மனோஜ் பாரதி உடலுக்கு நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி | அதிர்ந்து போனேன் : மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல் | இயக்குனர் பாரதிராஜா மகன், நடிகர் மனோஜ் பாரதி காலமானார் | பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண் | ரன்பீர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் | பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாக பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல் |
சதாசிவம் சின்னராஜ் என்பவர் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம், 'இஎம்ஐ- மாதத் தவணை'. காமெடி கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ள இப்படத்தை சபரி புரொடக்ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரித்துள்ளார்.
சாய் தான்யா நாயகியாக நடித்துள்ளார். பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் பேசியதாவது: நான், என் முதல் படத்துக்கு ஒரு மொக்கை கதையைத் தான் வைத்திருந்தேன். ஆனால் உதவி இயக்குனராக வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு, அதைத் தூக்கிப் போட்டுவிட்டேன். பின் நம் வாழ்க்கையில் இருந்து கதையை எடுப்போம் என கதையை உருவாக்கினேன்.
மலையாளத்தில் அங்கு இங்கு என்று கதைகளை தேடி படம் பண்ண வேண்டும் என்று நினைப்பதில்லை. வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை வைத்து படம் பண்ணுகிறார்கள். அதனால்தான், சீக்கிரம் படம் எடுக்க முடிகிறது, அதிக செலவில் செட் போட வேண்டியதில்லை, கோடி கணக்கில் செலவிட வேண்டியதும் இல்லாமல் போய்விட்டது. நம் வாழ்க்கையில் இருந்து கதை எடுத்தால் படம் ஜெயிக்கும். 'இஎம்ஐ' எல்லோரும் அனுபவிப்பது தான். இதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காமெடியோடு கதையைச் சொல்லியிருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள். இவ்வாறு பேசினார்.