வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

ஆதித்ய தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் துரந்தர். அவருடன் அக்சய் கண்ணா, சஞ்சய்தத், மாதவன், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 21 நாளில் ரூ.1006.7 கோடி வசூலித்திருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் 789.18 கோடியும், உலகளவில் 217.5 கோடியும் அடக்கம். இந்த துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த துரந்தர் படத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் 285 கோடிக்கு வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா -2' படத்தின் ஓடிடி உரிமை 270 கோடிக்கு விற்பனையான நிலையில், தற்போது அதைவிட துரந்தர் படம் அதிக தொகைக்கு விற்பனையாகி, இந்திய அளவில் இதுவரை ஓடிடியில் விற்பனையான படங்களில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட முதல் படமாகியுள்ளது.