திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! |
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்துடன் நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். விஜயின் கடைசி படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அத்துடன் படத்திற்கு 'ஜனநாயகன்' என தலைப்பிட்டதும், அவரது அரசியல் வருகைக்கு அச்சாரமாக இப்படம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் 2026ல் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதை கணக்கிட்டு படத்தை வெளியிடுவார்கள் என செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இன்று (மார்ச் 24) மாலை 6 மணிக்கு தயாரிப்பு நிறுவனம் பட ரிலீஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் நடித்த 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை, காலமெல்லாம் காத்திருப்பேன், கண்ணுக்குள் நிலவு, ப்ரண்ட்ஸ், திருப்பாச்சி, ஆதி, போக்கிரி, வில்லு, காவலன், நண்பன், ஜில்லா, பைரவா, மாஸ்டர், வாரிசு' ஆகிய 14 படங்களும் பொங்கலுக்கு வெளியாகி இருந்தது. இதில் 12 படங்கள் ஹிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.