ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இறுதிச்சுற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தையும் மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்தார் இயக்குனர் சுதா கொங்கரா. ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கியவரும் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஜி.ஆர். கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை தழுவி இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
நிஜ மனிதரின் வாழ்க்கை என்றாலும் அதை எதார்த்தமாக பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக சில காட்சிகளில் சூர்யா கெட்ட வார்த்தைகளை பேச வேண்டி இருந்ததாம்.. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அந்த வார்த்தைகளை பேச ரொம்பவே கூச்சப்பட்டு தயங்கி நின்றாராம்..
அதேசமயம் அப்படியே நேர்மாறாக டப்பிங் ஸ்டுடியோவில் படு வேகமாக, சத்தமாக அந்த வார்த்தைகளை பேசினாராம் சூர்யா. உடனே அவரை அமைத்திப்படுத்திய சுதா கொங்கரா, நீங்கள் இப்படி பேசுவதை உங்கள் தந்தை பார்த்தால் என் பையனை கெட்டவார்த்தை பேசவைத்து விட்டாயே என என்னை திட்ட போகிறார் என பயந்தாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா.