சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு |

தமிழில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைகார் படத்தில் முனீஷ்காந்த் நடித்த காமெடி வேடத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஆனால் இதற்கு முன்பே அவர் அமீர்கான் நடிக்கும் லால்சிங் சத்தா என்ற ஹிந்தி படத்தில் தான் அறிமுகமாக இருந்தார். கால்சீட் பிரச்சினையால் அப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது சமந்தாவின் கணவரான நாகசைதன்யா, அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க தற்போது கமிட்டாகியிருக்கிறார். இந்த வகையில் இந்த லால்சிங் சத்தா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நாக சைதன்யா.
தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் அமீர்கான், அடுத்தபடியாக லால்சிங் சத்தா படத்தில் இணையும்போது நாகசைதன்யாவும் அவருடன் இணைந்து நடிக்கப்போகிறார். மேலும், இப்படம் ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் என்ற படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும்.