லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கடந்த வருடம் இதே மார்ச் மாதம் இந்தியாவில் வேகமாக பரவத்தொடங்கிய கொரோனா தாக்கம், நவம்பர் மாத வாக்கில் சற்றே தணிந்தது போல தோன்றியது.. ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தாக்கத்திற்கு பல திரையுலக நட்சத்திரங்கள் ஆளாகி, அதிலிருந்து மீண்டுவந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இணைந்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ஆமீர்கான்.
ஆம். தனக்கு கொரோனா பாசிடிவ் அறிகுறிகள் தென்பட்டதால், தற்போது தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளாராம் ஆமீர்கான். இந்த தகவலை வெளியிட்டுள்ள அவரது செய்தி தொடர்பாளர் , சமீப நாட்களாக அமீர்கானை சந்தித்து சென்றவர்கள், தாங்களும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் நிதேஷ் திவாரி இயக்கத்தில் கியாரா அத்வானியுடன் விளம்பரப்படம் ஒன்றில் ஆமீர்கான் நடித்துவந்தார். இதனால் அந்த விளம்பரப்பட குழுவினரும் தங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்ள தயாராகி வருகிறார்களாம்.