சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லி, அதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். அதன்பிறகு பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது புதிய படத்தை இயக்கப்போவதாக மும்பை சென்று அவரை சந்தித்து விட்டு திரும்பினார். ஆனபோதும் அந்த படம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால் விஜய் 66ஆவது படத்தை அட்லி இயக்கப் போவதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் ஷாரூக்கான் படத்தின் ப்ரீபுரொடக்சன்ஸ் வேலைகளில் அட்லி ஈடுபட்டு வருவதாகவும் இன்னொரு பக்கம் செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் அட்லியின் மனைவியான பிரியா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது உதவி இயக்குனர் குழுவுடன் கையில் ஹெலிகாப்டர், கார் பொம்மைகளை வைத்துக் கொண்டு கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அட்லி. இதை வைத்துப் பார்க்கையில் ஷாரூக்கானை வைத்து தான் இயக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் அட்லி இறங்கியிருப்பது தெரிகிறது.
அதேசமயம், ஏற்கனவே ஷாருக்கானிடம் அட்லி சொன்ன இரண்டு கதைகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் தற்போது மூன்றாவதாக ஒரு கதை அவர் ரெடி பண்ணி வருவதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.