ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

2019ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று(மார்ச் 22) அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமாவிற்கு மொத்தமாக 7 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ், ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயுடன் பகிர்ந்து கொள்கிறார். சிறந்த நடிகைக்கான விருது ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்திற்குக் கிடைத்துள்ளது.
'மணிகர்ணிகா, பங்கா' ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. 'மணிகர்ணிகா' படத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சிராணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
கபடி விளையாட்டு வீராங்கனையாக இருந்து திருமணத்திற்குப் பின் குழந்தை பெற்று, ரயில்வேலைக்குச் சென்று பின் மீண்டும் எப்படி வீராங்கனையாக மாறுகிறார் என்ற கதையைக் கொண்ட 'பங்கா' படத்தில் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
இரண்டு படங்களிலுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஏற்று நடித்திருந்த கங்கனாவின் நடிப்பை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டி இருந்தனர். தற்போது அதற்காக தேசிய விருது கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு 2008ம் ஆண்டு 'பேஷன்' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காகவும், 2014ம் ஆண்டு 'குயின்' படத்திற்காகவும், அடுத்து 2015ம் ஆண்டு 'தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்' படத்திற்காகவும் மூன்று முறை தேசிய விருது வென்றுள்ளார். தற்போது 4வது முறையாக தேசிய விருதை வென்றுள்ளார் கங்கனா.
நாளை(மார்ச் 23) கங்கனாவுக்கு பிறந்தநாள். இன்று அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருத அவருக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. நாளை கங்கனா நடித்துள்ள 'தலைவி' படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.