வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பூஜா என்டர்டெயின்மென்ட். இந்நிறுவனத்தின் தயாரிப்பில், அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், அக்ஷய்குமார், டைகர் ஷராப், பிருத்விராஜ், மனுஷி சில்லர் மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வெளியான படம் 'படே மியான் சோட்டே மியான்'. சுமார் 300 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரான இந்தப் படம் படுதோல்வியடைந்தது. வெறும் 100 கோடியை மட்டுமே வசூலித்தது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்களான வாஷு பக்னானி, ஜாக்கி பக்னானி படத்தின் இயக்குனரான அலி அப்பாஸ் ஜாபர் மீது மும்பை, பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். படத்திற்காக அபுதாபியில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்ற சுமார் 9 கோடி ரூபாய் தொகையை அலி அப்பாஸ் தனது சொந்தப் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டதாக அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்களாம்.
அதே சமயம் தனக்கு சம்பளமாகத் தர வேண்டிய 7 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனம் இதுவரையிலும் தரவில்லை என அலி அப்பாஸ் சொன்னதாக பாலிவுட் வட்டாரங்களில் தெவிக்கிறார்கள். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய சினிமா ஊழியர்களின் மேற்கு கூட்டமைப்பு தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், அதை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளதாம்.
இந்த விவகாரம் தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்கி பக்னானி பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.