‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
2025ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஒரே நாளில் 10 படங்கள் இன்றைய தினம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே அவற்றில் சில படங்கள் இன்று வெளியாகவில்லை.
'அந்த 7 நாட்கள், தாவுத்,' ஆகிய இரண்டு படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதர்வா நடித்த 'தணல்' படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் இடையே உள்ள நிலுவைத் தொகை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அதன் நிலவரம் தெரிய வரும். அதன் பின்னரே படம் வெளியாகும்.
அதனால், இன்று, “பிளாக்மெயில், பாம், காயல், குமாரசம்பவம், மதுரை 16, உருட்டு உருட்டு, யோலா” ஆகிய 7 படங்கள் வெளியாகி உள்ளன. ஒரே நாளில் இத்தனை படங்கள் என்பதாலும், கடந்த வாரம் வெளிவந்த 'மதராஸி' படம் இரண்டாவது வாரத்தில் தொடர்வதாலும் இந்தப் படங்களுக்குக் குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ளன.