‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து கடந்த வாரம் வெளியான 'காட்டி' படம் எதிர்பாராத விதமாக படுதோல்வியைத் தழுவியது. படம் பற்றி யாருமே பரபரப்பாகப் பேசவில்லை. இதனால், அனுஷ்கா திடீர் முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களிலிருந்து சில காலம் விலகி இருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்திற்காக அவர் எந்தவிதமான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. தற்போது படத்தின் தோல்வி காரணமாகவும் அவர் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அது குறித்து எக்ஸ் தளத்தில், “நீல ஒளியை விளக்கு ஒளிக்கு மாற்றுகிறேன். சமூக ஊடகங்களிலிருந்து சற்று காலம் விலகி இருக்கப்போகிறேன், உலகுடன் மீண்டும் இணைந்து, தொடர்ந்து பயணிக்க, நாம் உண்மையில் தொடங்கிய இடத்திற்கு செல்ல... எல்லோரையும் விரைவில் கூடுதல் கதைகள் மற்றும் அன்புடன் சந்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'காட்டி' படத்தை இயக்குவதற்காகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும், பவன் கல்யாண் நடித்த 'ஹரிஹர வீரமல்லு' படத்தை இயக்குவததிலிருந்து விலகினார் இயக்குனர் கிரிஷ். ஆனால், தற்போது இந்தப் படமும் ஓடாமல் போய்விட்டது.