விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

சுந்தர.சி இயக்கிய ரெண்டு படத்தில் தமிழுக்கு வந்த அனுஷ்கா, அதன்பிறகு வேட்டைக்காரன், சிங்கம், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக பாகுபலி படத்திற்கு பிறகு தென்னிந்திய அளவில் முக்கிய நடிகையாக உருவெடுத்தார் அனுஷ்கா. என்றாலும் அதன் பிறகு அவரது உடல் எடை அதிகரித்ததால் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நிசப்தம், மிஸ் செட்டி மிஸ்டர் பாலி செட்டி, காட்டி என அவ்வப்போது ஒரு படத்தில் நடித்து வந்தார். இதில் கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்து வெளியான காட்டி படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த படம் திரைக்கு வந்து தோல்வி அடைந்து விட்டது. இந்நிலையில் தற்போது இந்த காட்டி படத்தை செப்டம்பர் 26ம் தேதியான நாளை அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.