ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை |

காதல் தோல்வி படங்களுக்கு இப்போதும் லேண்ட்மார்க்காக இருக்கும் படம் 'தேவதாஸ்'. மேற்கு வங்காள இயக்குனர் செப்டோபாத்தியாயா எழுதிய நாவல் தான் 'தேவதாஸ்'.  1937ம் ஆண்டு முதல் 'தேவதாஸ்' படம் வெளியானது. ஆனால் அப்போது அது பெரிதாக பேசப்படவில்லை. 
1953ம் ஆண்டு வெளிவந்த 'தேவதாஸ்' படமே இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. வேதாந்தம் ராகவய்யா இயக்கினார்.  வினோதா பிக்சர்ஸ்  நிறுவனத்தின் கீழ் டி.எல். நாராயணா தயாரித்தார். இது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. 
ஒரு நிலப்பிரபுவின் மகனான தேவதாஸ், ஏழைப் பெண் பார்வதியைக் காதலிப்பதை மையமாகக் கொண்டுள்ளது. அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, தேவதாஸ் தனது காதலி பார்வதியை திருமணம் செய்ய முடியாமல் போகிறது. அதோடு பார்வதி ஒரு வயதானவரை மணக்கிறார். பார்வதியை மறக்க முடியாமல், தேவதாஸ் குடிகாரராக மாறுகிறார். இதுதான் தேவதாஸ் படத்தின் கதை.  
முதலில் இந்தப் படத்தை வினோதா பிக்சர்ஸ் தயாரிக்க, அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் சவுகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் தொடங்கியது. தேவதாஸாக அக்கினி நாகேஸ்வரராவும், பார்வதியாக சவுகார் ஜானகி நடித்தனர். ஒரு வார படப்பிடிப்புக்குப் பிறகு, அத்தகைய கதை தெலுங்கில் வெற்றிபெறாது என்ற பார்வையின் காரணமாக படம் கைவிடப்பட்டது.
சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த படம் துவங்கப்பட்ட போது தேவதாசாக அக்கினினேனி நாகேஸ்வரராவ் நடித்தார்.  பார்வதி கேரக்டருக்கு சவுகார் ஜானகி பொருத்தமாக இல்லை என்பதை உணர்ந்த தயாரிப்பாளர் அவருக்கு பதிலாக சாவித்திரியை தேர்ந்தெடுத்தார். இவர்கள் தவிர தெலுங்கு பதிப்பிற்கு தெலுங்கு நடிகர்களும், தமிழ் பதிப்பிற்கு தமிழ் நடிகர்களும் நடித்தனர். 
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            