‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
'நேரம், ராஜா ராணி, வாயை மூடிப் பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்' என நான்கே படங்களில் தமிழில் நடித்திருந்தாலும் தனது துறுதுறு நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா.
நடிகர் பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்ட பின்பு சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். பின்னர் மீண்டும் மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்தார். தமிழில் சில படங்களில் நடிக்க உள்ளதாக பேசப்பட்டது. ஆனால், அவை எதுவும் இன்னும் நடக்கவில்லை.
இதனிடையே, 'தி மெட்ராஸ் மிஸ்டரி - பால் ஆப் எ சூப்பர்ஸ்டார்' தமிழ் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்ல் நடித்துள்ளார் நஸ்ரியா. அந்தக் கால சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர், பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொல்லப்பட்ட வழக்கில் சிறை சென்றதைப் பற்றிய கதையாக இத்தொடர் உருவாகி உள்ளது.
நேற்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நஸ்ரியா இடம் பெற்ற காட்சிகளின் வீடியோக்களும் வெளியாகி இருந்தன. கடைசியாக தமிழில் 2014ல் திருமணம் எனும் நிக்காஹ் எனும் படத்தில் நடித்தார் நஸ்ரியா. இப்போது வெப்தொடர் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார். வெப் தொடரைத் தொடர்ந்து விரைவில் நஸ்ரியாவை தமிழ் சினிமாவில் மீண்டும் பார்க்கலாம்.