‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
1953ம் ஆண்டு வெளியான படம் 'சண்டிராணி'. பி. பானுமதி இயக்கிய இந்தப் படம் வரலாற்று புனைவு கதையை அடிப்படையாகக் கொண்டது. பரணி பிக்சர்ஸ் பேனரின் கீழ் பி. எஸ். ராமகிருஷ்ணா ராவ் தயாரித்தது.
இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த படம் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் பானுமதி, என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கா ராவ் மற்றும் ரேலங்கி ஆகியோரும், ஹிந்தி பதிப்பில் ஆகாவும் நடித்தனர். சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் ஆகியோர் இசையமைத்தனர். மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்ட முதல் திரைப்படமும் முதல் பெண் இயக்குனரின் திரைப்படம் இதுவே.
ஒரு நாட்டின் மகாராஜாவை சூழ்ச்சி செய்து வீழ்த்துகிறான், தளபதி. பின்னர் அவனே மன்னர் ஆகிறான். பின்னர் மன்னரின் இரட்டை மகள்களை கொல்ல முயலும் போது மன்னர் மீது விசுவாசம் கொண்ட அமைச்சர் ஒரு மகளை காட்டுக்கு அனுப்பி விடுகிறார், ஒரு மகளை தானே வளர்க்கிறார். இந்நாளில் காட்டுக்குச் சென்ற மகள் எப்படி நாட்டை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.