அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யாராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலரும் தமிழில் நடித்திருக்கிறார்கள். தற்போது உலக அழகி போட்டியில் 2ம் இடம் பிடித்த சுமன் ராவும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
2019ம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சுமன் ராவ் 'தி கெய்ஸ்ட்' என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். தற்போது 'தெய்வா' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். இவர் ஏற்கெனவே 'பெமினா மிஸ் ராஜஸ்தான்', 'பெமினா மிஸ் இந்தியா', 'மிஸ் வேர்ல்டு ஆசியா' ஆகிய போட்டிகளிலும் போட்டியிட்டடு டைட்டில் வென்றவர்.
'தெய்வா' தமிழ் படத்தில் சுமன் ராவுடன் பவன், மகாலட்சுமி சுதர்சன், விக்னேஷ் ஆதித்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை பால சுப்பிரமணியம், சாந்தகுமார் சந்திரமோகன் ஆகிய இருவர் இணைந்து இயக்குகிறார்கள். தற்போது படத்தில் சுமன்ராவின் கேரக்டர் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அவர் அன்பரசி என்ற கேரக்டரில் நடிக்கிறார். இதை தனது இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ள சுமன் ராவ் “உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்பதற்கு அன்பரசி மிகவும் ஆவலாக இருக்கிறாள்” என்று பதிவிட்டுள்ளார்.