ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பாலிவுட்டின் பிரபல நடிகை ஊர்மிளா மடோண்ட்கர், 50. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996ல் வெளியான இந்தியன் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். குறிப்பாக கமல் உடன் அவர் ஆடிய ‛அக்கடான்னு நாங்க உடை போட்டா...' பாடலை ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். தொடர்ந்து பாலிவுட்டில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
ஊர்மிளா தன்னை விட 10 வயது குறைவான காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும், மாடலுமான மொஹ்சின் அக்தர் மிர் என்பவரைக் காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த சூழலில் கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டனர். இருவரின் வயது வித்தியாசத்தை வைத்து இவர்களின் திருமணம் அப்போது பேசு பொருளானது.
இந்நிலையில் 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களுக்குள் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொஹ்சினிடமிருந்து விவாகரத்து கோரி மும்பை குடும்பநல நீதிமன்றத்தில் ஊர்மிளா மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்கோத்ராவின் உறவினர் வீட்டு திருமணத்தில் தான் ஊர்மிளா, மொஹ்சின் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் பிஸ்னசிலும் இவர்களை இணைய வைத்து பின்னர் திருமண பந்தத்திலும் இணைத்தது. இப்போது இருவரும் பிரிவை நோக்கி நகர்ந்துள்ளனர்.