பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா |
பிரபல பாலிவுட் நடிகையும், எம்பி.யுமான கங்கனா ரணாவத் தற்போது 'எமெர்ஜென்சி' என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சி நடத்தியபோது அவரால் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை பின்னணியாக கொண்டு உருவாகி உள்ளது. இதில் இந்திராவாக கங்கனா நடித்துள்ளார். தனது சொத்துகள் அனைத்தையும் விற்று இந்த படத்தை எடுத்திருப்பதாக கங்கனா கூறியிருந்தார்.
இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து படம் வருகிற செப்டம்பர் 6ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புரமோசன் பணிகளில் கங்கனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் 'படத்தில் சீக்கிய சமூகத்தை பற்றி தவறாக சித்தரித்திருந்தால் இந்திராவிகு ஏற்பட்ட முடிவுதான் உங்களுக்கும் ஏற்படும்' என்று சில சீக்கிய இளைஞர்கள் வீடியோ மூலம் கங்கனாவுக்கு கொலை மிரட்டல் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் 'எமெர்ஜென்சி' படத்தை தடை செய்யக்கோரி பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றங்களில் சீக்கிய அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 'சீக்கியர்களுக்கு எதிரான காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், படம் வெளியானால் மக்களின் ஒற்றுமை சீர்குலைந்து அமைதி கெட்டு விடும் என்றும் சர்ச்சை காட்சிகளை நீக்கிய பிறகே படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும்' என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். இந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.