அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழில் அதிக வரவேற்பைப் பெற்ற பயோபிக் படமான 'சூரரைப் போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக் மோசமான வரவேற்பைப் பெற்று அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தமிழில் படத்தை இயக்கிய சுதா கொங்கரா ஹிந்தியிலும் படத்தை இயக்க தமிழில் நடித்த சூர்யா, மனைவி ஜோதிகாவுடன் மற்றும் சிலருடன் இணைந்து தயாரித்துள்ள படம்.
முதல் நாள் இந்திய வசூலாக இரண்டரை கோடி, அதற்கடுத்த நாள் வசூலாக நான்கரை கோடி என இரண்டாவது நாளில் கொஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனாலும், இந்த வசூல் மிக மிகக் குறைவு.
இன்று முதல் வேலை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் குறைய வாய்ப்புள்ளது. அதனால், பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் தியேட்டர்களில் இப்படத்தைப் பார்க்க வந்தால் டீ, சமோசா ஆகியவை இலவசம் என அறிவித்துள்ளார்கள்.
'சர்பிரா'வைப் பார்க்க 'சமோசா' இலவசமாகத் தர வேண்டிய சூழல் வந்துள்ளது குறித்து ஹிந்தித் திரையுலகத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனராம்.