லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
'ஹனு மான்' படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகத்தில் 300 கோடிக்கும் அதிகமான வசூல் படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் பிரசாந்த் வர்மா. இந்த ஆண்டு தெலுங்கில் வந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படம்.
பிரசாந்த் வர்மா அடுத்ததாக இப்படத்தின் அடுத்த பாகமான 'ஜெய் ஹனுமான்' படத்தை இயக்க உள்ளார். இதற்கடுத்து ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், கடந்த சில வாரங்களாக அந்தப் படம் டிராப் ஆகிறது என்றும் சொல்லி வந்தார்கள்.
ஆனால், அதற்கெல்லாம் பிரசாந்த் வர்மா தரப்பில் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். படத்திற்கான கதை முழுமையாகத் தயாராக உள்ளதாம். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.