வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்டவர் பாடகி லதா மங்கேஷ்கர். பாரத ரத்னா விருது பெற்ற அவர் கடந்த 2022-ம் ஆண்டு தனது 92-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது நினைவாக 'லதா தீனாநாத் மங்கேஷ்கர்' விருது வழங்கி வருகிறார்கள்.
தேசத்திற்கும், சமூகத்திற்கும், கலைக்கும், இசைக்கும் தன்னலமற்ற சேவை செய்பவர்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போன்ஸ்லேவும் இந்த விருதை பெற்றார்.
இந்த வருடம் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது அமிதாப்பச்சனுக்கும், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர். லதா மங்கேஷ்கரின் தந்தை தீனாநாத் நினைவு நாளையொட்டி வருகிற 24ம் தேதி இந்த விருது வழங்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
இவர்களுடன் மூத்த மராத்தி நடிகர் அசோக் சரப், நடிகை பத்மினி கோலாபுரி, பாடகர் ரூப்குமார் ரத்தோட், மராத்தி நாடக நடிகர் நடிகர் அதுல் பார்ச்சுரே, எழுத்தாளர் மஞ்சிரி பாட்கே, நடிகர் ரந்தீப் ஹூடா ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.
இதனை பாடகி உஷா மங்கேஷ்கர், ஆதிநாத் மங்கேஷ்கர் அறிவித்தனர்.