டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஒரு காலத்தில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். ஆனால், தற்போது தொடர் தோல்வியில் தவித்து வருகிறார். அக்ஷய் குமார், டைகர் ஷெராப், பிருத்விராஜ், மனுஷி சில்லர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'படே மியான் சோட்டோ மியான்' படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. சுமார் 350 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம் 7 நாட்களுக்குப் பிறகு 100 கோடியை நெருங்குவதாகச் சொல்கிறார்கள். இன்னும் 200 கோடி வசூலித்தால் கூட படம் லாபம் தர வாய்ப்பில்லையாம்.
பாலிவுட்டில் அக்ஷய் தொடர்ந்து தோல்விகளையே தந்து கொண்டிருக்கிறார். 'காஞ்சனா' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'லட்சுமி'யில் ஆரம்பமானது அவரது தோல்வி. அதன் பின் வந்த 10 படங்களுமே தோல்விப் படங்கள்தான். இருந்தாலும் கைவசம் ஐந்தாறு படங்களை வைத்துள்ளார் அக்ஷய்.
அவரது அடுத்த வெளியீடாக ஜுலை மாதம் 12ம் தேதி 'சர்பிரா' படம் வெளியாக உள்ளது. தமிழில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக்தான் இந்தப் படம். இப்படமாவது அவரைக் காப்பாற்றுமா என்று அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.