லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் ஜூனியர் என்டிஆர் மிகப் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் ஹிந்தியில் உருவாகி வரும் வார் 2 என்கிற படத்திலும் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். ஹிரித்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் இந்திய சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர்.
இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்ளும் ஜூனியர் என்டிஆர் உடற்பயிற்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். இதில் அவருக்கு பக்கபலமாக இருப்பவர் ஜிம் பயிற்சியாளர் மன்னவ்.
இந்த நிலையில் வார் 2 படப்பிடிப்பில் மன்னவ்வின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். மன்னவுக்கு ஜூனியர் என்டிஆர் கேக் ஊட்டி விடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.