அனுபமா பரமேஸ்வரன் படத்தில் நடிக்கும் சமந்தா | விலை உயர்ந்த காரை வாங்கிய ஊர்வசி ரவுட்டேலா | விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் டீசர் வெளியானது | சம்பள பாகுபாடு : சமந்தா முன்னெடுத்த செயல் | டான்சர் என்ற முத்திரையை உடைக்க விரும்பும் ஸ்ரீலீலா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன் : ஹீரோ யார் தெரியுமா? | பராசக்தி படத்தில் இணைந்த குரு சோமசுந்தரம், பசில் ஜோசப் | ராஜமவுலி படப்பிடிப்பு: ஒடிசா துணை முதல்வர் மகிழ்ச்சி | 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் சாம் சிஎஸ் | 33 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக கே ரங்கராஜ் |
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஷாரூக்கான் தனது ‛பதான், ஜவான்' படங்களின் மூலம் இந்தாண்டு ரூ.2500 கோடி வசூல் சாதனை படைத்தார். இந்த நிலையில் ஷாரூக்கான் அடுத்து நடிக்கும் 'டன்கி' படத்தின் டீசர் வெளியாகி அடுத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது பிரமாண்ட இமேஜில் இருந்து இறங்கி வந்து ஒரு இயக்குனரின் நடிகராக அவர் தன்னை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருப்பதை டீசர் காட்டுகிறது.
முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இந்த படத்தை இயக்கி உள்ளார். அவர் இயக்கிய அத்தனை படங்களும் வெற்றி படங்கள் என்பதால் ஷாரூக்கானுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படத்தில் டாப்ஸி, விக்கி கவுஷல், போமன் இரானி, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ப்ரிதம் இசையமைத்துள்ளார். ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பஞ்சாப்பை சேர்ந்த 5 இளைஞர்கள் ஜாலியாக தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்களில் ஷாரூக்கானும் இருக்கிறார். சட்டத்திற்கு புறம்பான வழியில் லண்டனுக்கு வேலைக்கு செல்ல திட்டமிடுகிறார்கள். இந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் தான் படம்.
இந்த மாதிரியான சட்டவிரோத பயணங்களுக்கு 'டன்கி' என்று பெயர். அதனையே படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக ஷாரூக்கான் நடித்துள்ளார். ஜவான், பதான் படங்களின் எந்த சாயலும் இல்லாமல் துள்ளலான ஒரு இளைஞனாக நடித்திருக்கிறார். படம் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.