லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் டங்கி. ஷாரூக்கான், டாப்ஸி, போமன் இரானி, விக்கி கவுஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பஞ்சாபிலிருந்து பல நாடுகளை திருட்டுத்தனமாக கடந்து லண்டனுக்கு வேலைக்கு செல்லும் 5 நண்பர்களை பற்றிய கதை. இந்த படம் தங்கள் நாட்டை தவறாக சித்தரிப்பதாக சொல்லி இங்கிலாந்து நாட்டில் தணிக்கை சான்றிதழ் மறுத்தனர்.
இந்த நிலையில் படத்தின் உண்மை தன்மையை அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு தூதர்களுக்கு மும்பையில் படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.
ஹங்கேரி, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, சுவிஸ், ஸ்பெயின், துருக்கி, இஸ்ரேல், தென் கொரியா, பின்லாந்து, மொரிஷியஸ், ஓமன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு படத்தை பார்த்தனர். திரையிடலுக்கு பிறகு இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வெளிநாட்டு தூதர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.