அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை அஞ்சலி பாட்டீல். தமிழில் காலா, குதிரைவால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அஞ்சலி பாட்டீல் மும்பை அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு அஞ்சலிக்கு கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் போன் செய்தார். அவர் உங்களது பெயரில் வெளிநாட்டில் இருந்து வந்த பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகவும், அதை சுங்க துறையினர் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுமாறு கூறினார்.
இதைத் தொடர்ந்து மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்டு பானர்ஜி என்பவர் அஞ்சலி பாட்டீலை தொடர்பு கொண்டு உங்களது வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறினார். இதனை சரிசெய்ய 96 ஆயிரத்து 525 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால் பயந்துவிட்ட அஞ்சலி அவர் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பினார். பின்னர் அவர் மேலும் ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 291 செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த பணத்தையும் நடிகை அஞ்சலி அனுப்பி வைத்துள்ளார்.
இதன் பிறகுதான் அஞ்சலி பாட்டீல் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகையிடம் நூதன முறையில் 5 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதால் குற்றவாளி எளிதில் பிடிபட்டு விடுவார். அஞ்சலி பக்கம் எந்த தவறும் இல்லை என்றால் அவர் ஏன் பணம் அனுப்ப வேண்டும். இந்த இரு கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.