தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

80களின் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டுக்கு சென்று அங்கும் முன்னணி நடிகை ஆனார். தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து கொண்ட அவருக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருவருமே தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள்.
இதில் பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்.டி.ஆரின் புதிய படமான 'தேவரா' மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்திருக்கிறார். ஜான்வி கபூர் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்து வருகிறார். இருவரும் ஆண்டு தோறும் திருப்பதி கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்து சென்றனர். பல பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டனர். ஆனால் ஜான்வி கபூர் தனது காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஆனால் அதனை தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியில் புகழ்பெற்ற 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்ககேற்ற அவரிடம் 'ஸ்பீட் டயல் லிஸ்ட்டில் உள்ள மூன்று பேர் யார்?' என்று கேட்க, அதற்கு ஜான்வி 'அப்பா, தங்கச்சி அப்புறம் ஷிக்கு' எனக் கூறி உள்ளார். அதோடு ஷிகர் பஹாரியாவை டேட் செய்வதையும் ஒத்துக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தங்கை குஷியும் கலந்து கொண்டார்.