போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் |
சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்து 2020ம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'சூரரைப் போற்று'. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை சுதா இயக்க அக்ஷய்குமார், ராதிகா மதன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை முதலில் செப்டம்பர் 1ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது பட வெளியீட்டை அடுத்த வருடம் பிப்ரவரி 16ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அக்ஷய்குமார் நடித்துள்ள சில படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளதால் இப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
அக்ஷய்குமார் நடித்துள்ள 'ஓ மை காட் 2' படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கடுத்து அவர் நடித்து வரும் 'த கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ' படம் அக்டோபரில் வெளியாக உள்ளது. அடுத்தடுத்து பட வெளியீடுகளில் சிக்கிக் கொள்ள வேண்டாமென்று தான் அடுத்த வருடம் பிப்ரவரிக்கு தள்ளி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அக்ஷய் குமார் நடித்து கடைசியாக வெளிவந்த ஐந்து ஹிந்திப் படங்களுமே தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.