அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கடந்த 2020ம் ஆண்டு சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் சூரரைப்போற்று. ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் வரவேற்பை பெற்றது. அதோடு ஐந்து தேசிய விருதுகள் பெற்ற இந்த படத்தில் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. சாமானியர்களும் விமானத்தில் செல்ல முடியும் என்னும் கதைக்களத்தில் உருவான இந்த படம் ஜி .ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவானது.
இந்நிலையில் தற்போது சூரரைப் போற்று படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சியை வெளியிட்டு உள்ளார்கள். இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் சூர்யா ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். அதோடு தற்போது சூரரைபோற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வரும் சுதா, இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிப்பதால் சூரரைப்போற்று படத்தில் படமாக்கப்பட்டு பின்னர் படத்தில் இணைக்க முடியாமல் டெலிட் செய்த சில முக்கிய காட்சிகளையும் ஹிந்தி ரீமேக்கில் இணைப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.