மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வசிக்கிறார். கடந்த 2011ம் ஆண்டு வெளியான 'சட்டப்படி குற்றம்' படத்தின் விளம்பர செலவுக்காக ரூ.76,112 ரூபாயை வழங்காததை தொடர்ந்து அந்த விளம்பர உரியாமையாளர் சரவணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பணத்தை சந்திரசேகர் செலுத்தாததால் அவருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் சென்றபோது ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் கோர்ட் உத்தரவை அமல்படுத்த போலீசாரின் உதவி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்த விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‛‛இந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது. ஆனால் எப்படி ஜப்தி செய்ய வந்தனர் என தெரியவில்லை'' என்றார்.