விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

கடந்த 2020ம் ஆண்டு சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் சூரரைப் போற்று. கொரோனா தொற்று காரணமாக இந்த படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதோடு சிறந்த நடிகர், நடிகை உள்பட  ஐந்து தேசிய விருதுகளையும்  பெற்றுள்ளது.  தற்போது ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் சூரரைப் போற்று படத்தை ரீமேக் செய்து வருகிறார் சுதா. இப்படத்தில் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில்  நடிக்கிறார். 
இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தை போலவே ஹிந்தி ரீமேக்கும் ஓடிடி தளத்தில்  வெளியாக இருப்பதாக கடந்த சில தினங்களாக  ஒரு செய்தி வைரலாகி வந்தது. ஆனால் இந்த செய்தியை தற்போது படக்குழு மறுத்துள்ளது. சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும். தியேட்டரில் ஓடிடி  முடித்த பிறகு தான் ஓடிடிக்கு  வரும் என்று ஒரு செய்தி வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்.
 
           
             
           
             
           
             
           
            