ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது . டெக்கான் ஏர்வேஸ் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகிய இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்த படத்தை இந்தியிலும் இயக்குக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். ராதிகா மதன் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் சூர்யா இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் செய்தி பரவியது . இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக அக்ஷய்குமாருடன் இருக்கும் போட்டோவை சூர்யா பகிர்ந்து அவருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதை சூர்யாவே உறுதி செய்துள்ளார்.
சூர்யா கூறுகையில், "அக்ஷய் குமார் உங்களை வீர்-ஆக ஏக்கத்துடன் பார்த்தேன். எங்கள் கதையை அழகாக மீண்டும் உயிர்ப்புடன் உருவாக்குகிறார் சுதா கொங்கரா. ஒவ்வொரு நிமிடத்தையும் சூரரைப்போற்று ஹிந்தி குழுவுடன் ரசித்தேன். ஒரு சிறிய சிறப்பு தோற்றத்துடன்'' என்றார்.