தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த விஜய்சேதுபதி, தமிழை விட தற்போது இந்தியில் தான் அதிக படங்களில் நடித்து வருகிறார். மும்பைகார், மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் ஷாருக்கானுடன் ஜவான் ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இதில் கத்ரீனா கைப்புடன் அவர் இணைந்து நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த மெர்ரி கிறிஸ்துமஸ் படக்குழுவினர் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாகவும் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் அனில் கபூரின் தம்பியான சஞ்சய் கபூர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், விஜய்சேதுபதி போன்ற சிறந்த நடிகருடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி” என்றும் கூறியுள்ளார்.