தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கி உள்ளார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பேஷ்ரங் என்கிற பாடல் பரபரப்பான சர்ச்சையை கிளப்பியதுடன் படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டியையும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் கூறும்போது, தான் எப்போதும் படங்களில் சண்டைக் காட்சியை வைப்பதற்கு அதிகம் விரும்புவதாக கூறியுள்ளார்.
அந்த வகையில் பதான் படத்தில் பைக் சண்டை காட்சிகளும் ஓடும் ட்ரெயின் மேல் நடக்கும் சண்டை காட்சிகளும் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இந்த படம் உளவுத்துறை வீரர் மற்றும் தீவிரவாதிகள் ஆகியோருக்கு இடையே நடைபெறும் போராட்டம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இந்த படத்திற்காக ஷாருக்கானும் அவருடன் இணைந்து பயணிக்கும் தீபிகா படுகோனும் பிரபலமான ஜப்பானிய மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை பயிற்சியை கற்றுக்கொண்டு நடித்துள்ளார்கள். அவையும் தத்ரூபமாக இருக்கும் என்று கூறியுள்ளார் சித்தார்த் ஆனந்த்.