மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பாகுபலி படம் வெளியான பின்பு ஒரு நேரத்தில் ஒரே ஒரு படம் மட்டுமே செலெக்ட்டிவாக தேர்ந்தெடுத்து நடித்துவந்த நடிகர் பிரபாஸ், அந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து ‛காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பது போல தற்போது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஆதிபுருஷ், சலார் போன்ற படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இவை தவிர புராஜெக்ட் கே, ராஜா டீலக்ஸ், ஸ்பிரிட் ஆகிய படங்களும் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் தான், ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த், பிரபாஸ் படத்தை இயக்குவதாக கடந்த சில முன்பு மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. அந்த படத்தை தயாரிப்பதாக சொல்லப்படும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளருடன் சித்தார்த் ஆனந்த் சந்திப்பும் நிகழ்ந்து ஒரு மிகப்பெரிய தொகை அட்வான்ஸ் ஆக கொடுக்கப்பட்டதாகவும் அப்போது சொல்லப்பட்டது.
இந்த நிலையில் பிரபாஸ் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால், தான் நினைத்தபடி தங்களது படத்தை இயக்குவதற்கு உடனடியாக வசதியான தேதிகள் கிடைக்காது என்பதை உணர்ந்து, இந்த படத்தில் இருந்து தற்போது விலகிக் கொண்டுள்ளாராம் சித்தார்த் ஆனந்த். அதுமட்டுமல்ல இந்த படத்திற்காக தனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அட்வான்ஸ் தொகையையும் தயாரிப்பு நிறுவனத்திடம் திருப்பிக் கொடுத்து விட்டாராம். தற்போது ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷனை வைத்து அவர் இயக்கி வரும் பைட்டர் என்கிற படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது.