சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் | ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : காங்கிரஸ் எம்எல்ஏ கொந்தளிப்பு | அல்லு அர்ஜுன் - அட்லீ படம் விரைவில் ஆரம்பம்? | அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர் | பிரியங்கா சோப்ராவின் 'தமிழன்' பட அனுபவம் பகிர்ந்த அம்மா | 'சப்தம்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு | யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் |
ஹிந்தியில் தீபிகா படுகோனே கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஜெக்ராயான். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விரைவில் அமேசானில் நேரடியாக வெளியாக உள்ள இந்த படம் குறித்து தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக 48 முறை ரீடேக் எடுத்ததாக கூறியுள்ளார். இந்த காட்சி அந்த இடத்திலேயே திடீரென்று உருவானது என்றும் இதனால் நடிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார் தீபிகா. மேலும், இப்படத்தில் தீபிகா படுகோனே உடன் அனன்யா பாண்டே, சித்தார்த் சதுர்வேதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஒரு பையனுடன் இரண்டு சகோதரிகள் டேட்டிங் செய்யும் கதையில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 11ம் தேதி வெளியாகிறது.